அறிமுகம்




ஒரு கலாச்சார மெடாலியன் பெறுநர் (1990), திருமதி சந்தா பாஸ்கர் தனது தனித்துவமான நடன பணிக்காக அறியப்பட்டவர். அவர் தற்போது சிங்கப்பூர் Nrityalaya கலை மன்றத்தின் வேந்தராகவும் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தலைமை பயிற்சியாளராகவும் இருக்கிறார். இந்த தமிழ் செயல்திறன் பணியில் அவரைப் பற்றி நாங்கள் அறிந்துக் கொள்ள போகிறோம்.





திருமதி சந்தா பாசகரின் வாழ்க்கை குறிப்பு


1939 - திருமதி சந்தா பாஸ்கர் கேரளாவில் 1939 ஆண்டில் பிறந்தவர். 

அவர் ஒரு இசை குடும்பத்தில் இருந்து வந்தவர். திருமதி பாஸ்கர் நடனம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. அவரது தந்தை அவரை கட்டாயப்படுத்தியதால் அவர் நடனம் கற்றுக்கொண்டார். ஆனால், திருமதி சந்தாவின் அம்மா அவரது படிப்பில் குறிப்பாக இருந்தார்

இலவச நடன வகுப்புகளுக்கு சென்றார். தந்தை  திருமதி சந்தாவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து நடன மாஸ்டரை கேரளாவுக்கு அழைத்து வந்தார். பல போட்டிகளில் பங்குப் பெற்ற அனுபவம் அவருக்கு உண்டு. ஆனால் அவருக்கு சிகை அலங்காரம் செய்துக் கொள்வதில் ஒருப்போதும் விருப்பம் இருந்த தில்லை. இதுவே அவரின் எளிமையான தோற்றத்திற்கு காரணமாகும்.

1955 - திருமதி சந்தாவுக்கு பதினைந்து வயதில் திரு பாஸ்கரோடு திருமணம் நிகழ்ந்தது.

அவர் சிங்கப்பூருக்கு வந்தபோது திரு பாஸ்கரும் அவரது குடும்பம் மற்றும் மாணவர்களும் அவரை அன்போடு வரவேற்றதால் அவருக்கு சிங்கப்பூரை மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் இருவரும் பாஸ்கர் நடன அகாடமி என்ற நிறுவனத்தின்  கீழ் தொடர்ந்து நடனம்  கற்பித்தார்கள். 

ஜனவரி 16, 1958 - திருமதி சந்தாவுக்கும் திரு பாஸ்கருக்கும் அவர்களது முதல் குழந்தை,  ஆனந்த மோகன் இந்தியாவில் பிறந்தார். 

1961 ஏப்ரல் 30 - அவர்களின் 2 வது குழந்தை ஆனந்த ராம் பிறந்தார். 

1961 - 1965: Aneka Ragam Rakyat: பாஸ்கர் நடன அகாடமி, சிங்கப்பூர் சிறிய தொலை கிராமங்களில் சிங்கப்பூரில் கலைகளை ஊக்குவிப்பதற்காக ஒரு பல கலாச்சார செயல்திறன் தொடரில் பங்கேற்றனர்.

பிப்ரவரி 24, 1963- மீனாச்சி பாஸ்கர், அவர்களது முதல் மகள், பிறந்தார். 

1987-  சிங்கப்பூர் Nrityalaya கலை மன்றம் ஒரு இலாப நோக்கற்ற போதனை நிறுவனமாக பதிவுச் செய்யப்பட்டது. அவர்கள் இசை, நடனம், மற்றும் கலை வகுப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றன.

1990 - திருமதி சந்தா பாஸ்கரிக்கு, நடனத்தில் அவரது பங்களிப்புகளுக்காக, கலாச்சார மெடாலியன் அளிக்கப்பட்டது.

1993 - பாஸ்கர் ஒரு கலை அகாடமி அறப்பணி நிலை கொண்ட உத்தரவாதம் கட்டுப்படுத்தப்படும், ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, திருமதி சந்தாவின்  கலை அகாடமியில் 2000 மாணவர்கள் பயில்கிறார்கள். மேலும், அவர் பல சிறந்த மாணவர்களை உருவாக்கி உள்ளார்.





சமூக பங்களிப்புகள்


திருமதி சந்தா சிங்கப்பூரில் இந்திய பாரம்பரிய நடனமான, பரதநாட்டியத்தின் வளர்ச்சிக்கு  பெருமளவில் பங்களித்துள்ளார். அவர் சிங்கப்பூரில் , நாம் இன மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று தேசிய கல்வி செய்தியை, தெளிவாக வெளிப்படுத்துகிறார். சிங்கப்பூரில் உள்ள அனைத்து வகையான நடனங்களையும் அவரது நடன அமைப்புகளில் இணைப்பதால் அவர் கலாச்சாரம், மதத்தின் அழகை வருங்கால தலைமுறைகள் பார்க்க பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்புகிறார். மேலும் அவர் அவரின் வாழ்க்கையை ஆட அர்ப்பணித்துள்ளார். நாம் அவரிடமிருந்து நம் கலாச்சாரத்தின் அழகை மதிக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.


விருதுகள்...

1990யில், அவர் தேசிய கலாச்சார விறுதை வென்றார். 2002யில், திருமதி ஸந்தா பாஸ்கர்,எஸ்பலனேடில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் நடனமாடினார். அந்த நடனத்தில், அவர் நான்கு தேசிய மொழிகளிலிருந்த்து கவிதைகளை தேர்வு செய்து, அவற்றை நடனமாக மாறினார். இச்சம்பவம் அவரை ஒரு பிரபலமாக மாற்ற உதவியது.


ஆடற்கலை திருமதி ஸந்தா பாஸ்கரின் பல திறன்களில் ஒன்றாகும். அது அவருக்கு அதிகமான திருப்தி அளிக்கிறது. “எனக்கு நடன ஆடைகளை அணிவதும் அலங்காரம் செய்வதும், பிடிக்காது. ஆனால், கருத்துக்களை

இயக்கங்களாக மாற்றவும், ஆடற்கலையும் பிடிக்கும். அதுதான் எனக்கு அதிக சுகத்தை கொடுக்கிறது,” என்று அவர் கூறினார். 

மேலும், திருமதி சந்தா பாஸ்கர் 1957யில் கவி யோகி ஷுதாநந்தா பாரதியார் மூலம் நாட்டிய கலாநிதி விருதும், சிங்கப்பூர் இந்தியு கலை மன்றத்தால் கலா ரத்தினம் என்ற விருதும் மற்றும் இந்திய திரைப்படம் மற்றும் கலை சங்கங்கத்தால், கலா ராணி விருதையும் வாங்கி உள்ளார். அவர் தொலைக்காட்சிக்கு 50க்கும் மேற்பட்ட நடனங்களை இயக்கி வந்துள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களை நடத்தி வந்துள்ளார்.