1990யில், அவர் தேசிய கலாச்சார விறுதை வென்றார். 2002யில், திருமதி ஸந்தா பாஸ்கர்,எஸ்பலனேடில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் நடனமாடினார். அந்த நடனத்தில், அவர் நான்கு தேசிய மொழிகளிலிருந்த்து கவிதைகளை தேர்வு செய்து, அவற்றை நடனமாக மாறினார். இச்சம்பவம் அவரை ஒரு பிரபலமாக மாற்ற உதவியது.
ஆடற்கலை திருமதி ஸந்தா பாஸ்கரின் பல திறன்களில் ஒன்றாகும். அது அவருக்கு அதிகமான திருப்தி அளிக்கிறது. “எனக்கு நடன ஆடைகளை அணிவதும் அலங்காரம் செய்வதும், பிடிக்காது. ஆனால், கருத்துக்களை
இயக்கங்களாக மாற்றவும், ஆடற்கலையும் பிடிக்கும். அதுதான் எனக்கு அதிக சுகத்தை கொடுக்கிறது,” என்று அவர் கூறினார்.
மேலும், திருமதி சந்தா பாஸ்கர் 1957யில் கவி யோகி ஷுதாநந்தா பாரதியார் மூலம் நாட்டிய கலாநிதி விருதும், சிங்கப்பூர் இந்தியு கலை மன்றத்தால் கலா ரத்தினம் என்ற விருதும் மற்றும் இந்திய திரைப்படம் மற்றும் கலை சங்கங்கத்தால், கலா ராணி விருதையும் வாங்கி உள்ளார். அவர் தொலைக்காட்சிக்கு 50க்கும் மேற்பட்ட நடனங்களை இயக்கி வந்துள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களை நடத்தி வந்துள்ளார்.
No comments:
Post a Comment